×

சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் செல்ல இ - பாஸ் வழங்குவது நிறுத்தமா?: உரிய ஆவணங்கள் கொடுத்தாலும் இ - பாஸ் வழங்கவில்லை என மக்கள் புகார்!

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் செல்ல இ - பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சென்னையில் இருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல இ - பாஸ் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இ - பாஸை பொறுத்தவரையில் பல நடைமுறைகள் உள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல முதலில் அனுமதிப்பது அந்தந்த மாவட்ட நிர்வாகம் தான். தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் மறைமுகமாக தகவல் செல்வதாக கூறப்படுகிறது. அதாவது சென்னையில் இருந்து யாரேனும் இ - கேட்டு விண்ணப்பித்தால் அதனை அனுமதிக்க வேண்டாம் என கூறப்படுவதாக தெரிகிறது. ஆதலால் சென்னை மக்கள் திருமணம், இறப்பு, மருத்துவ பிரச்சனை உள்ளிட்ட காரணங்களுக்குகாக இ - பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் அவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உரிய ஆவணங்கள் கொடுத்தாலும், இ - பாஸ் வழங்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இ - பாஸ் விண்ணப்பங்கள் காரணம் கூறப்படாமல் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆதனால் மக்கள் பலர் மறைமுகமாக கிராமங்களின் வழியே சொந்த ஊர்களுக்கு செல்வது அதிகரித்து வருகிறது. இ - பாஸ் இன்றி வேறு மாவட்டங்களுக்கு சென்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் சென்னையில் இருந்து வெளியே செல்லவே பலரும் துடித்து வருகின்றனர். தொடர்ந்து, திருமணத்துக்காக சொந்த ஊர் செல்ல மணப்பெண்ணுக்கே இ - பாஸ் மறுக்கப்பட்டுள்ளதால் எஸ்.ஐ.குடும்பம் தவிப்புக்குள்ளாகி உள்ளது.


Tags : Chennai ,boss ,districts , Chennai, Outsourcing, E-Pass, Stop ?, Relevant Documents, E-Pass, Not Issued, Complaint
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...